Menu
Your Cart

அமாவும் பட்டுப்புறாக்களும்

அமாவும் பட்டுப்புறாக்களும்
-5 %
அமாவும் பட்டுப்புறாக்களும்
ஜோசலின் கல்லிட்டி (ஆசிரியர்), சசிகலா பாபு (தமிழில்)
₹404
₹425
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1856. அவத் ராஜ்ஜியத்தின் தலைநகரமான லக்னோ கிழக்கிந்திய கம்பெனியின் பேராசைக் கரங்களுக்கு இலக்காகிறது; நவாப் கல்கத்தாவில் கம்பெனியின் உயரதிகாரிகளைச் சந்திக்கக் கோரிக்கை மனுவோடு முகாமிட்டிருக்கிறார்; அவரின் தாயாரோ லண்டனில் விக்டோரியா மகாராணியின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்; இந்தச் சூழலில் நவாப்பின் இரண்டாம் மனைவியான, அரச குடும்பத்தில் பிறக்காத, அரசி என்ற அந்தஸ்து அளிக்கப்படாமல் காமக் கிழத்திகளில் ஒருத்தியாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் பேகம் அஸ்ரத் மகல் கம்பெனிப் படையின் அத்துமீறல்களை எதிர்கொண்டு தனது இளம்வயது மகனுக்கு முடிசூட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டி லக்னோவை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி வென்றதா? லக்னோ காப்பாற்றப்பட்டதா? இந்தக் காலகட்டச் சம்பவங்களை, நவாப் குடும்பத்தின் நம்பிக்கைக்குக்குரியவளும் அவரது கருவூலத்தின் பாதுகாவலாளியும் தாய் வழியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவளும் போராளியுமான அமா என்ற இளம்பெண்ணின் வாழ்வனுபவங்களாக நாவல் விரிக்கிறது. போர்ச்சூழலின் வக்கிரமான புற அழிபாடுகளைப் பற்றிய விவரணைகள் ஒரு போர்க்களத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன; மனித உணர்வுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் இவற்றிற்குப் போர் விடுக்கும் சவாலும் நெருக்கடியும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதமும் காத்திரமான பாத்திரங்களின் மூலம் நாவலில் நுட்பமாக வெளிப்படுகின்றன.
Book Details
Book Title அமாவும் பட்டுப்புறாக்களும் (Amavum pattupurakkalum)
Author ஜோசலின் கல்லிட்டி
Translator சசிகலா பாபு (Sasikalaa Paapu)
ISBN 9789355231369
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின..
₹333 ₹350
சசிகலா பாபு கவிதைகள் பெண் உடலை அடைவதற்கான பெண் மொழியை இதுகாறும் செய்யப்பட்டுவந்த ஆண்மொழியைப் பகடி செய்வதன் மூலம் அடைகின்றன. விளைவாக இடதுவலது மாற்றம் பெறாத ஒரு ஆடிப்பிம்பத்தைப் பார்க்கிற அதிர்ச்சியை வாசிக்கிற ஆண்கள் மத்தியிலும் ஆண்மொழிக்கு பழக்கப்பட்ட பெண்களிடத்திலும் உருவாக்குகின்றன. தன்னை ஒரு உடல் ..
₹95 ₹100
“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’. தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில் இருந்து கண்டிருந்த என் போன்றோரிடையே, வாழ்வதற்கான உரிமையும், அன்ப..
₹190 ₹200
கிரேக்கம், ரோமானியம், நார்வே, செல்டிக், எகிப்து, அமெரிக்கப் பழங்குடியினம், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் புகழ்வாய்ந்த புராணங்களில் இருந்து, இருபது இதிகாசக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர்களே இக்கதைகள் அனைத்திலும் நாயகர்களாக வலம்வரு..
₹190 ₹200